மஹிந்தவிடம் 3 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு

குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் மஹிந்த ராஜபக்ஸவிடம் 3 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு

by Bella Dalima 17-08-2018 | 3:26 PM
Colombo (News 1st)  குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் 3 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் இன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. விஜேராம பகுதியிலுள்ள முன்னாள் ஜனாதிபதியின் இல்லத்திற்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் இன்று காலை 11.30 அளவில் சென்றிருந்தனர். குறித்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு வருகை தந்து வாக்குமூலம் வழங்குமாறு பல்வேறு சந்தர்ப்பங்களில் முன்னாள் ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எனினும், எவ்வித பதிலும் கிடைக்காததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸவும் சபாநாயகர் கரு ஜயசூரியவும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.