வௌ்ளத்தில் சிக்கிய நடிகர் பிரித்விராஜின் தாயார் மீட்பு

வௌ்ளத்தில் சிக்கிய நடிகர் பிரித்விராஜின் தாயார் மீட்பு

வௌ்ளத்தில் சிக்கிய நடிகர் பிரித்விராஜின் தாயார் மீட்பு

எழுத்தாளர் Bella Dalima

17 Aug, 2018 | 5:47 pm

கேரளாவில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக சுமார் 2,23,000 பேர் வரை இடம்பெயர்ந்துள்ள நிலையில், நடிகர் பிரித்விராஜ் வீட்டிலும் வௌ்ளம் புகுந்துள்ளது.

வௌ்ளத்தில் சிக்கிய பிரித்விராஜின் தாயார், பெரிய பாத்திரம் ஒன்றின் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.

கேரள மாநிலத்தில் இதுவரை காணாத அளவிற்கு பலத்தமழை பெய்து வருகிறது.

தமிழில் மொழி, காவியத் தலைவன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகர் பிரித்விராஜின் வீடு கொச்சியில் உள்ளது.

கொச்சியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல வீடுகளுக்குள் நீர் புகுந்துள்ளது. பிரித்விராஜின் வீட்டிற்குள்ளும் வெள்ள நீர் புகுந்துள்ளது.

பிரித்விராஜின் தாயாரும், நடிகையுமான மல்லிகா சுகுமாரன் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டார். அவரை 4 பேர் சேர்ந்து காப்பாற்றியுள்ளனர்.

பெரிய பாத்திரத்தில் அமர வைத்து வீட்டில் இருந்து வெளியே தூக்கி வந்துள்ளனர். அந்த படமும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு மலையாளம், தமிழ் திரையுலக நடிகர்கள் நிவாரண உதவி வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்