மட்டக்களப்பில் சமுர்தி நிதி மோசடி: 8 சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்

மட்டக்களப்பில் சமுர்தி நிதி மோசடி: 8 சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்

மட்டக்களப்பில் சமுர்தி நிதி மோசடி: 8 சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்

எழுத்தாளர் Bella Dalima

17 Aug, 2018 | 3:54 pm

Colombo (News 1st)  மட்டக்களப்பு சமுர்தி சமூக பாதுகாப்பு நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட 8 சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சமூக திணைக்கள பாதுகாப்பு மைய பகுதிக்கான 57 இலட்சம் ரூபா பணம் இவ்வாறு மோசடி செய்யப்பட்டுள்ளது.

அரச வங்கியொன்றில் வைப்பிலிடப்பட்டிருந்த சமூக பாதுகாப்பிற்கான நிதியில் மோசடி இடம்பெற்றுள்ளதாக அங்கு கடமையாற்றும் உத்தியோகத்தர் ஒருவரால் முறைப்பாடு செய்யப்பட்டது.

இது குறித்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது, வைப்பிலிடப்பட்ட நிதிக்கான காசோலையில் போலியான கையொப்பமிடப்பட்டு 57 இலட்சம் ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளமை தெரியவந்தது.

சம்பவம் தொடர்பில் 6 பெண்கள் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களை நேற்று (16) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியதை அடுத்து, 8 சந்தேகநபர்களும் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சமுர்தி திணைக்களத்தில் கடமையாற்றும் ஒருவரும் கைது செய்யப்பட்டவர்களில் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்