திருவிழா எனும் பெயரில் திமிங்கலங்கள் கொலை

திருவிழா எனும் பெயரில் திமிங்கலங்கள் கொலை: இரத்த சிவப்பாக மாறிய கடல் நீர்

by Bella Dalima 17-08-2018 | 4:31 PM
டென்மார்க்கின் பரோயே தீவில் அதிகளவில் திமிங்கலங்கள் கொல்லப்படுவதால், அவற்றின் உடலில் இருந்து வெளியாகும் இரத்தம் காரணமாக கடல் நீர் சிவப்பாக மாறிவிடுகிறது. பரோயே தீவில் ஆண்டுதோறும் கோடை காலத்தின் முடிவில் கடலில் வாழும் திமிங்கலங்களைக் கொல்லும் திருவிழா நடைபெறுகிறது. இந்த தீவில் வாழும் மக்கள் கூட்டம் கூட்டமாக படகுகளில் கடலுக்குள் சென்று அங்கிருந்து திமிங்கலங்களை கரைக்கு ஓட்டி வந்து, பின்னர் கடற்கரையில் ஒதுங்கும் திமிங்கலங்களை கூரிய கத்தியால் வெட்டிக்கொல்கின்றனர். 5 வயது சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை திமிங்கலங்களைக் கொல்லும் நிகழ்ச்சியில் கலந்துகொள்கின்றனர். இந்த திருவிழா அங்கு 16 ஆம் நூற்றாண்டில் இருந்து நடைபெற்று வருகின்றது. உலகம் முழுவதும் விலங்குகள் நல ஆர்வலர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். ஆனால், இங்குள்ள மக்கள் அதை கண்டுகொள்வதில்லை.