கேரளாவில் வௌ்ளம்: உயிரிழப்பு 164 ஆக அதிகரிப்பு, 2,23,000 பேர் இடம்பெயர்வு

கேரளாவில் வௌ்ளம்: உயிரிழப்பு 164 ஆக அதிகரிப்பு, 2,23,000 பேர் இடம்பெயர்வு

கேரளாவில் வௌ்ளம்: உயிரிழப்பு 164 ஆக அதிகரிப்பு, 2,23,000 பேர் இடம்பெயர்வு

எழுத்தாளர் Bella Dalima

17 Aug, 2018 | 5:20 pm

கேரளாவில் வௌ்ள அனர்த்தங்கள் காரணமாக கடந்த 8 ஆம் திகதி முதல் தற்போது வரையான காலப்பகுதியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 164 ஆக அதிகரித்துள்ளது.

கேரளா முழுவதும் உள்ள 1,568 நிவாரண முகாம்களில் 52,856 குடும்பங்களைச் சேர்ந்த 2,23,000 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அரசு வழங்கிய ஹெலிகொப்டர்கள் மட்டுமல்லாது மாநில அரசின் அதிகாரிகளும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

மேலும், பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு வௌ்ள நிலைமை தொடர்பில் கேட்டறிந்து கொண்டதாக முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

கேரளாவின் 13 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், கனமழை நீடிக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்