புதன்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

புதன்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 16-08-2018 | 6:13 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. புத்தளம் கடற்கரையில் கரையொதுங்கிய கழிவுப்பொருட்களின் மாதிரிகளை பரிசோதனை செய்ததன் பின்னர், இந்த கழிவுப் பொருட்கள் கேரளாவிலிருந்து இலங்கைக் கரையை அடைந்துள்ளதாக சமுத்திர பாதுகாப்பு அதிகார சபை உறுதி செய்துள்ளது. 02. வவுனியா – கூமாங்குளம் பகுதியில் கிணறு ஒன்றில் இருந்து தாயும் மகனும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். 03. ஊடகவியலாளர் கீத் நொயாரை கடத்திச்சென்று சித்திரவதைக்கு உட்படுத்தியமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம், எதிர்வரும் 17 ஆம் திகதி வாக்குமூலமொன்றைப் பதிவு செய்ய குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தீர்மானித்துள்ளது. 04. தனியார் பஸ் ஊழியர் சங்கத்தின் ஒரு பிரிவினர், நேற்று (15) நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுப்பதற்குத் தீர்மானித்துள்ளனர். 05. பெற்றோர் பெற்ற கடனுக்காக மகளைத் தாக்கிய கொடூர சம்பவமொன்று யாழ்ப்பாணத்தில் பதிவாகியுள்ளது. வௌிநாட்டுச் செய்திகள் 01. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் 48 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 67 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 02. இந்தியாவின் கேரளா மாநிலம் வௌ்ளக்காடாக மாறியுள்ள நிலையில், வௌ்ளத்தில் சிக்கி இதுவரையில் 47 பேர் உயிரிழந்துள்ளனர். அதேநேரம், 12 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 03. மகாகவி பாரதியார் எழுதியது போன்று இந்தியா மகாதேசமாக உருவெடுக்கும் என சுதந்திர தின உரையில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். விளையாட்டுச் செய்திகள் 01. ஆசிய விளையாட்டு விழாவிற்கான இலங்கை நீச்சல் குழாத்தில் இடம்பெற்றுள்ள பம்பலப்பிட்டி புனித பீற்றர்ஸ் கல்லூரியின் மாணவர் அகலங்க பீரிஸ், இந்தோனேஷியாவிலிருந்தவாறு உயர்தரப் பரீட்சையில் தோற்றுவதற்கான வாய்ப்பை கல்வித்துறை அதிகாரிகள் ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர்.