தனியார் பஸ் ஊழியர்களின் பகிஷ்கரிப்பு தோல்வி

தனியார் பஸ் ஊழியர்களின் பகிஷ்கரிப்பு தோல்வி

தனியார் பஸ் ஊழியர்களின் பகிஷ்கரிப்பு தோல்வி

எழுத்தாளர் Staff Writer

16 Aug, 2018 | 1:29 pm

Colombo (News 1st) தனியார் பஸ் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றபோதும், சில பகுதிகளில் வழமைபோன்று தனியார் பஸ்கள் சேவையில் ஈடுபட்டுள்ளதாக நியூஸ்பெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கொழும்பின் பல பகுதிகளில் தனியார் பஸ்கள் வழமைபோன்று சேவையில் ஈடுபட்டமை எமது கெமராக்களில் பதிவாகின.

பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக காலியிலிருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் தனியார் பஸ்கள் சேவையில் ஈடுபடவில்லை.

கண்டி மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் பஸ் போக்குவரத்து வழமைபோல் இடம்பெற்றாலும், இன்று காலை தனியார் பஸ்கள் குறைவாகவே போக்குவரத்தில் ஈடுபட்டதாக நியூஸ்பெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

போக்குவரத்து குற்றங்களுக்காக அபராதம் அதிகரிக்கப்பட்டமைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தனியார் பஸ் ஊழியர்கள் நேற்று (15) நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்