கழிவுப்பொருட்கள் கேரளாவிலிருந்து வந்தவை என உறுதி

புத்தளத்தில் கரையொதுங்கிய கழிவுப்பொருட்கள் கேரளாவில் இருந்து வந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது

by Staff Writer 15-08-2018 | 9:08 PM
Colombo (News 1st) புத்தளம் கடற்கரையில் கரையொதுங்கிய கழிவுப்பொருட்களின் மாதிரிகளை மேலதிக விசாரணைகளுக்காக முந்தல் பிரதேச சுகாதார வைத்திய அலுவலக அதிகாரிகள் இன்று (15) எடுத்துச்சென்றுள்ளனர். இந்தியாவின் கேரளாவில் இருந்து இந்த கழிவுப்பொருட்கள் இலங்கை கரையை அடைந்துள்ளதாக சமுத்திர பாதுகாப்பு அதிகார சபை உறுதி செய்துள்ளது. புத்தளம் மாவட்டத்தில் உடப்பு தொடக்கம் - தொடுவாய் வரையான சுமார் 10 கிலோமீட்டர் தூரத்திற்கு கரையொதுங்கிய கழிவுப்பொருட்கள் இன்னமும் அகற்றப்படாதுள்ளமையை அவதானிக்க முடிகின்றது. இதேவேளை, முந்தல் பிரதேச சுகாதார வைத்திய அலுவலக அதிகாரிகள் இன்று பரிசோதனை மேற்கொண்டனர். கழிவுப்பொருட்களின் மாதிரிகள் சுகாதார வைத்திய அலுவலக அதிகாரிகளினால் பரிசோதனைக்காக எடுத்துச்செல்லப்பட்டன.