தரம் 5 பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் ஆரம்பம்

தரம் 5 பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் ஆரம்பம்

தரம் 5 பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

15 Aug, 2018 | 7:55 am

Colombo (News 1st) ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் இன்று (15) ஆரம்பமாகின்றன.

அந்தவகையில், 35 மத்திய நிலையங்களில் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பீ பூஜித தெரிவித்துள்ளார்.

இன்று ஆரம்பமாகும் பணிகள் எதிர்வரும் 21 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளன.

இதன்பின், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதலாம் அல்லது இரண்டாம் வாரமளவில் மாணவர்களின் பெறுபேற்றை வௌியிடுவதற்கு பரீட்சைத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பிரதிப் பரீட்சைகள் ஆணையாளர் எஸ். பிரணவதாசன் தெரிவித்துள்ளார்.

குறித்த மதிப்பீட்டுப் பணிகளில் 8,000 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும்  தெரிவித்துள்ளார்.

இந்தத் தடவை, ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் 3,55,326 மாணவர்கள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்