களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளில் நீர்விநியோகம் தடை

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளில் நீர்விநியோகம் தடை

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளில் நீர்விநியோகம் தடை

எழுத்தாளர் Staff Writer

15 Aug, 2018 | 2:13 pm

Colombo (News 1st) களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளில் நீர்விநியோகம் தடைப்பட்டுள்ளது.

களுத்துறை கெத்தேன நீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு மின்சாரத்தை விநியோகிக்கும் பிரதான மின் விநியோகக் கட்டமைப்பின் மீது மரமொன்று முறிந்து வீழ்ந்துள்ளது.

இதனால், நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கான பிரதான மின்விநியோகம் தடைப்பட்டுள்ளமை யால், நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

நீர் விநியோகத்திற்காக, சுத்திகரிப்பு நிலையத்திற்கான மின் இணைப்பை மீளமைக்கும் நடவடிக்கைகளை தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை முன்னெடுத்து வருகின்றது.

நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கான மின்சார இணைப்பை மீள இணைத்ததன் பின்னர், நீர் விநியோகம் வழமைக்குத் திரும்பும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

வாதுவ, களுத்துறை வடக்கு, களுத்துறை தெற்கு, பயாகல, மாகொன்ன மற்றும் பேருவளை பகுதிகளில் வசிக்கும் மக்கள் நீர் விநியோகத் தடையால் பெரும் இன்னல்களை எதிநோக்கியுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்