லெப்டினன்ட் கமாண்டர் சந்தன பி. ஹெட்டியாராச்சி கைது

11 மாணவர்கள் கடத்தல்: லெப்டினன்ட் கமாண்டர் சந்தன பி. ஹெட்டியாராச்சி கைது

by Staff Writer 14-08-2018 | 3:52 PM
Colombo (News 1st)  'நேவி சம்பத்' என்றழைக்கப்படும் லெப்டினன்ட் கமாண்டர் சந்தன பி. ஹெட்டியாராச்சி குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை நாளை (15) வரை தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் குற்றப்புலனாய்வு பிரிவிற்கு அனுமதியளித்துள்ளது. அவர் இன்று கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். 2008 இல் 11 மாணவர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினரால் இன்று அவர் கைது செய்யப்பட்டார். லெப்டினன்ட் கமாண்டர் சந்தன பி. ஹெட்டியாராச்சியை பார்த்தவுடனேயே கைது செய்யுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் மூன்று தடவைகள் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.