முல்லை – நாயாறில் தீக்கிரையாகியுள்ள மீனவர் வாடிகள்

முல்லை – நாயாறில் தீக்கிரையாகியுள்ள மீனவர் வாடிகள்

முல்லை – நாயாறில் தீக்கிரையாகியுள்ள மீனவர் வாடிகள்

எழுத்தாளர் Staff Writer

14 Aug, 2018 | 1:08 pm

Colombo (News 1st) முல்லைத்தீவு – நாயாறு பகுதியில் மீனவர் வாடிகள் சில தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

முல்லை – செம்மலை, நாயாறு பகுதியில் நேற்று (12) இரவு 10.30 மணியளவில் 8 வாடிகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.

அத்துடன், மீன்பிடிப்படகு ஒன்றும் மீன்பிடி வலைகள் உள்ளிட்ட பல இலட்சம் பெறுமதியான பொருட்களும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த சந்தர்ப்பத்தில் வாடிகளுக்குள் சிறுவர்கள், பெண்கள் பலர் உறங்கிக் கொண்டிருந்ததுடன், தீ பரவுவதை அவதானித்தவுடன் அங்கிருந்து வௌியேறியுள்ளனர்.

தமது வாடிகளுக்கு அருகில் தென்பகுதி மீனவர்களின் குடிசைகள் காணப்படுவதாகவும் இந்த சம்பவத்தையடுத்து குறித்த மீனவர்கள் அப்பகுதியிலிருந்து வௌியேறியுள்ளதாகவும் முல்லை – செம்மலை, நாயாறு பகுதி மீனவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

எவரேனும் வாடிகளுக்குத் தீ வைத்துள்ளனரா அல்லது தானாகவே தீப்பற்றியுள்ளதாக என்பது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்