by Bella Dalima 14-08-2018 | 4:22 PM
இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோலி, லார்ட்ஸ் டெஸ்டில் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்ததால் டெஸ்ட் தரவரிசையில் 2 ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்டார்.
இங்கிலாந்து - இந்தியா இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.
முதல் டெஸ்டில் இந்தியா 31 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பறிகொடுத்தது. இந்த டெஸ்டில் 149 மற்றும் 51 ஓட்டங்கள் அடித்த விராட் கோலி டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தைப் பிடித்தார்.
லார்ட்ஸில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 159 ஓட்டங்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. விராட் கோலி முதல் இன்னிங்ஸில் 23 ஓட்டங்களும், 2 ஆவது இன்னிங்ஸில் 17 ஓட்டங்களும் அடித்தார். இதன் மூலம் முதல் இடத்தைப் பறிக்கொடுத்தார்.
929 புள்ளிகளுடன் ஸ்மித் மீண்டும் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். விராட் கோலி 919 புள்ளிகளுடன் 2 ஆவது இடத்தில் உள்ளார். ஜோ ரூட் 851 புள்ளிகளுடன் 3 ஆவது இடத்தில் நீடிக்கிறார்.