புதிய தபால் மா அதிபர் நியமிக்கப்படவுள்ளார்

புதிய தபால் மா அதிபர் நியமிக்கப்படவுள்ளார்

புதிய தபால் மா அதிபர் நியமிக்கப்படவுள்ளார்

எழுத்தாளர் Staff Writer

14 Aug, 2018 | 4:01 pm

Colombo (News 1st)  தபால் மா அதிபர் பதவிக்கு ரஞ்சித் ஆரியரத்ன நியமிக்கப்படவுள்ளார்.

இதற்கான அனுமதியை அமைச்சரவை உப குழு வழங்கியுள்ளதாக தபால்துறை அமைச்சர் ஏ.எச்.எம். ஹலீம் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் தபால் மா அதிபர் ரோஹன அபேரத்ன கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஜனாதிபதி செயலகத்திற்கு இடமாற்றம் கோரியிருந்தார்.

இதனால் ஏற்பட்டுள்ள பதவி வெற்றிடத்திற்கு பொலன்னறுவை மாவட்ட முன்னாள் செயலாளர் ரஞ்சித் ஆரியரத்னவை பரிந்துரை செய்திருந்ததாக தபால்துறை அமைச்சர் குறிப்பிட்டார்.

இதற்கமைய, இந்த புதிய நியமனம் தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது.

குறித்த பத்திரம் அமைச்சரவையினால் அமைச்சரவை உபகுழுவில் இன்று சமர்ப்பிக்கப்பட்டு, அதற்கான அனுமதி வழங்கப்பட்டதாக தபால்துறை அமைச்சர் ஏ.எச்.எம். ஹலீம் கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்