பிரித்தானிய பாராளுமன்ற சுவரில் கார் மோதியதில் பலர் காயம்

பிரித்தானிய பாராளுமன்ற சுவரில் கார் மோதியதில் பலர் காயம்

பிரித்தானிய பாராளுமன்ற சுவரில் கார் மோதியதில் பலர் காயம்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

14 Aug, 2018 | 2:00 pm

பிரித்தானிய பாராளுமன்றத்தின் பாதுகாப்பு சுவரின் மீது கார் ஒன்று மோதியதில் பலர் காயமடைந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தைத் தொடர்ந்து, குறித்த காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் அவற்றை வெளியிடுவதாக லண்டன் பொலிஸார் தமது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், இது பயங்கரவாத செயலோடு தொடர்புடையதா இல்லையா என்பது குறித்து அவர்களால் உடனடியாகக் கூறமுடியவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்