திருமதி ஆகப்போகும் நடிகை சுவாதி

திருமதி ஆகப்போகும் நடிகை சுவாதி

திருமதி ஆகப்போகும் நடிகை சுவாதி

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

14 Aug, 2018 | 12:25 pm

சுப்பிரமணியபுரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிய நடிகை சுவாதி ரெட்டிக்கு (31 வயது), அவரது காதலருடன் திருமணம் நடைபெறவிருக்கிறது.

மலேசியன் எயார்லைன்ஸில் விமானியாகப் பணியாற்றும் விகாஸ் என்பவருக்கும் சுவாதிக்கும் இடையே ஏற்பட்ட நட்பு காதலாக மலர்ந்துள்ளது.

இவர்களது காதலுக்கு இருவீட்டாரும் பச்சைக்கொடி காட்டியதையடுத்து, சுவாதி – விகாஸ் திருமணம் எதிர்வரும் 30ஆம் திகதி ஹைதராபாத்தில் நடைபெறவுள்ளது.

தெலுங்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவிருந்த சுவாதி, தமிழில் அறிமுகமாகிய ‘சுப்பிரமணியபுரம்’ படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதுகளும் கிடைத்தன.

இதனைத் தொடர்ந்து போராளி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வடகறி, யட்சன், யாக்கை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்