திங்கட்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

திங்கட்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

திங்கட்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

14 Aug, 2018 | 6:13 am

Colombo (News 1st)
உள்நாட்டுச் செய்திகள்

01. வெலிக்கடை சிறைச்சாலையின் பெண் கைதிகள் சிலர் கூரையின் மீது ஏறி, எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

02. பாகிஸ்தான் கடற்படைக்கு சொந்தமான “டெசிக் பீ.எம்.எஸ்.எஸ்”காஷ்மீர் கப்பல் நல்லெண்ண விஜயம் மேற்கொண்டு நேற்று (13) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

03. யால தேசிய சரணாலயத்தின் வலயமொன்று 2 மாதங்களுக்கு மூடப்படவுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

04. ரயில் கட்டணங்கள் 15 வீதத்தால் திருத்தப்படவுள்ளன.

அதற்கான வர்த்தமானி அறிவித்தலைத் தயாரித்து, அமைச்சிடம் ஒப்படைத்துள்ளதாக பிரதி வணிக அத்தியட்சகர் என்.ஜே. இதிபொலகே தெரிவித்துள்ளார்.

05. புத்தளம் மாவட்டத்தின் உடப்பு தொடக்கம் – தொடுவாய் வரையான சுமார் 10 கிலோமீற்றர் வரையான கடற்கரையில் கழிவுப்பொருட்கள் கரையொதுங்கியுள்ளன.

வௌிநாட்டுச் செய்திகள்

01. தாய்வானின் நியூ தய்பேய் நகரில் (New Taipei City) உள்ள வைத்தியசாலையில் பரவிய தீயில் சிக்கி குறைந்தது 9 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு அரச செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

02. சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் சிக்கி சிறுவர்கள் உட்பட குறைந்தது 39 பேர் கொல்லப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விளையாட்டுச் செய்திகள்

01. உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணிக்கு சம்பியன் பட்டத்தை வென்றுக் கொடுப்பதே தமது இலக்கு என சுழற்பந்து வீச்சாளரான அகில தனஞ்சய தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்