சிறைச்சாலை புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் தொடர்பில் விசாரணை

சிறைச்சாலை புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் தொடர்பில் விசாரணை

சிறைச்சாலை புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் தொடர்பில் விசாரணை

எழுத்தாளர் Staff Writer

14 Aug, 2018 | 7:33 am

Colombo (News 1st) சிறைச்சாலை புலனாய்வுப் பிரிவின் நூற்றுக்கும் அதிகமான அதிகாரிகள் தொடர்பில் தற்போது விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நீதி மற்றும் சிறைச் சாலைகள் அமைச்சு குறிப்பிடுகின்றது.

அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எம்.எம். அதிகாரி இதனைக் குறிப்பிட்டுள்ளார். சிறைச் சாலைகளுக்குள் இடம்பெறும் முறைகேடுகள் காரணமாக கடந்த காலங்களில் இடமாற்றம்  பெற்ற சிறைச்சாலை உயர்மட்ட அதிகாரிகள் உள்ளிட்ட 20 அதிகாரிகள் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை , சிறைச்சாலை அதிகாரிகளால் மேற்கொள்ளப்படும், பணம் பெறும் செயற்பாடுகள் தொடர்பில் இலஞ்ச ஊழல் மற்றும் விசாரணை ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு செய்யப்பட உள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு தகவல் வௌியாகியுள்ள அதிகாரிகளுக்கு எதிரான முறைப்பாடுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்