இரத்தினபுரி – மாரப்பனவில் வர்த்தகர் ஒருவர் மீது துப்பாக்கிச்சூடு

இரத்தினபுரி – மாரப்பனவில் வர்த்தகர் ஒருவர் மீது துப்பாக்கிச்சூடு

இரத்தினபுரி – மாரப்பனவில் வர்த்தகர் ஒருவர் மீது துப்பாக்கிச்சூடு

எழுத்தாளர் Staff Writer

14 Aug, 2018 | 9:14 am

Colombo (News 1st) இரத்தினபுரி – மாரப்பன பகுதியில் மாணிக்ககல் வர்த்தகர் ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தகர், இன்று (14) அதிகாலை 5 மணியளவில் காரில் பயணித்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் அத்தியட்சகர், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

நிவித்திகல பகுதியை சேர்ந்த 59 வயதான மாணிக்ககல் வர்த்தகர் மீதே துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முயற்சிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் வர்த்தகருக்கு காயமேற்படவில்லை எனவும் அருகிலுள்ள வீடு மற்றும் வர்த்தக நிலையத்தின் மீதே துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்