ரயில் கட்டணங்கள் 15 வீதத்தால் திருத்தம்

ரயில் கட்டணங்கள் 15 வீதத்தால் திருத்தம்

by Staff Writer 13-08-2018 | 6:08 AM
Colombo (News 1st) ரயில் கட்டணங்கள் 15 வீதத்தால் திருத்தப்படவுள்ளன. அதற்கான வர்த்தமானி அறிவித்தலைத் தயாரித்து, அமைச்சிடம் ஒப்படைத்துள்ளதாக பிரதி வணிக அத்தியட்சகர் என்.ஜே. இதிபொலகே தெரிவித்துள்ளார். ரயில்வே தொழிற்சங்கத்தினர் கடந்த 4 நாட்களாக முன்னெடுத்த பணிப்பகிஷ்கரிப்பினால், 64 மில்லியன் ரூபா வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இந்தநிலையில், ரயில்வே தொழிற்சங்கத்தினர் முன்னெடுத்த பணிப்பகிஷ்கரிப்பு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. இதனையடுத்து, இன்று (13) காலை கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் வழமைபோன்று ரயில் போக்குவரத்து இடம்பெற்றதாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் குறிப்பிட்டார். அதேநேரம், ரயில் சேவைகள் வழமைபோன்று முன்னெடுக்கப்படுவதாக ரயில்வே திணைக்களத்தின் மேலதிக ரயில் பொதுமுகாமையாளர் விஜய சமரசிங்க தெரிவித்துள்ளார்.