ஞாயிற்றுக்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

ஞாயிற்றுக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 13-08-2018 | 5:58 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. ரயில்வே தொழிற்சங்கங்கள் முன்னெடுத்திருந்த பணிப்பகிஷ்கரிப்பு நேற்றுடன் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. 02. தனியார் மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து மின்சாரம் கொள்வனவு செய்யப்பட்ட விதம் மற்றும் மின்சக்தி சட்டத்தை மீறும் வகையில் மின்சார சபையின் அதிகாரிகள் செயற்பட்டமை தொடர்பில் கோப் குழுவில் அதிருப்தி வௌியிடப்பட்டுள்ளது. 03. பாராளுமன்றத்தில் சுயாதீன குழுவாக செயற்படுவது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தெரிவித்தது. 04. வேலையற்ற பட்டதாரிகள் 4,000 பேரை அரச சேவையில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 05. அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவின் புதிய வரைபு தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கு அமைய இல்லை என தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். வௌிநாட்டுச் செய்திகள் 01. கேரளாவில் தொடர்ந்தும் சீரற்ற வானிலை நிலவி வருகின்ற நிலையில், பல மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக மாநில பேரழிவு மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. 02. சூரியன் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வதற்காக (பார்கர் சோலர்) Parker Solar என்ற செயற்கைக் கோள் நாசா நிறுவனத்தினால் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. விளையாட்டுச் செய்தி 01. தென் ஆபிரிக்காவுக்கு எதிரான 5ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியை இலங்கை அணி 178 ஓட்டங்களால் வெற்றிகொண்டது. இலங்கை அணி நிர்ணயித்த 300 ஓட்டங்களை நோக்கி பதிலளித்தாடிய தென் ஆபிரிக்க அணி, 24.4 ஓவர்களில் 121 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது.