இலங்கைக்கு அமெரிக்கா 39 மில்லியன் நிதியுதவி

இலங்கைக்கு 39 மில்லியன் நிதியுதவி அளிக்கும் அமெரிக்கா

by Staff Writer 13-08-2018 | 12:44 PM
வங்காள விரிகுடா திட்டத்தில் இலங்கையின் பங்களிப்பு இலங்கையின் மனிதாபிமான செயற்பாடுகள் மற்றும் பேரிடரின் போதான நிலைப்பாடு தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் கலந்துரையாட தீர்மானித்துள்ளதாக அமெரிக்க வௌியுறவுத்துறையார் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பங்களாதேஷ் , இந்தேனேஷியா , மஙகோலியா , நேபாளம் , பசுபிக் தீவுகள் , பிலிப்பைன்ஸ் , இலங்கை , வியட்நாம் மற்றும் ஏனைய நாடுகளின் பாதுகாப்பு உறவில் குறித்த நிதியுதவி முதலீடாக அமையும் எனவும் வெிளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய பசுபிக் பிராந்தியத்தின் சுதந்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கு இயலுமை அற்ற மற்றும் அதிக கட்டுப்பாடுகள் கொண்ட நான்கு முக்கிய பகுதிகளில் இந்த முதலீடுகளை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கடல் வழி பாதுகாப்பு , மனிதாபின உதவிகள் , பேரிடர் போதான செயற்பாடுகள் , சமாதான முன்னெடுப்புகள் மற்றும் நாடு கடந்த குற்றங்களை குறைப்பதற்கான செயற்பாடுகளும் இதனுள் அடங்குகின்றன.