ரோமானிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் 400 பேர் காயம்

ரோமானிய அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் 400 பேர் காயம்

by Staff Writer 12-08-2018 | 12:22 PM
ரோமானியாவில் அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டப் பேரணியில் 400 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ரோமானிய தலைநகர் பச்சரெஸ்ட்டில் (Bucharest) பொதுமக்களால் இந்த எதிர்ப்பு பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் இடம்பெறும் ஊழலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கடந்த வௌ்ளிக்கிழமை 50,000க்கும் அதிகமான மக்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆர்ப்பாட்டக்காரர்களில் சிலர் போத்தல்களை வீசியதையடுத்து பொலிஸார் கண்ணீர்ப் புகைப் பிரயோத்தில் ஈடுபட்டதாகவும் இதன்போது பொலிஸார் சிலர் காயமடைந்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தநிலையில், மக்களின் ஆர்ப்பாட்டத்தில் கலகமடக்கும் பொலிஸாரின் தலையீட்டைத் தான் கண்டிப்பதாக ஜனாதிபதி க்ளோஸ் லொஹான்னிஸ் (Klaus Iohannis) தெரிவித்துள்ளார்.