by Staff Writer 12-08-2018 | 8:52 PM
சூரியன் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வதற்காக (பார்கர் சோலர்) Parker Solar என்ற செயற்கைக் கோள் நாசா நிறுவனத்தினால் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.
முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த செயற்கைக்கோள் சூரியனுக்கு மிக அருகில் சென்று ஆய்வு மேற்கொள்ளவுள்ளமை சிறப்பம்சமாகும்.
அத்துடன், மனிதர்களால் உருவாக்கப்பட்ட மிக வேகமான நகர்வினைக் கொண்ட விண்கலமாகவும் Parker Solar வரலாற்றில் இடம்பிடித்துள்ளது.
இதனைத்தவிர உயிருடனுள்ள ஒருவரின் பெயர் விண்கலமொன்றுக்குச் சூட்டப்படுவதும் இதுவே முதற்தடவையாகும்.
சூரியப் புயல்கள் தொடர்பாக 60 ஆண்டுகளுக்கு முன்னரே கணித்த சூரிய இயற்பியலாளர் யூஜின் பார்க்கரின் (Eugene Parker) பெயரே சூட்டப்பட்டுள்ளது.
Delta-IV என்ற பாரிய ரொக்கெட்டின் மூலம் இந்த விண்கலம் அமெரிக்க நேரப்படி இன்று அதிகாலை 03.31 க்கு விண்ணில் ஏவப்பட்டுள்ளது.
புளோரிடா மாநிலத்தின் கேப் கெனவரெல் பகுதியிலிருந்து (ape Canaveral) இது விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.