சனிக்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

சனிக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 12-08-2018 | 6:33 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாவுல்லா தெரிவித்தார். 02. இந்தியா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கான 10 புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 03. மேல் மாகாண சபைக்கான கதிரைகள் கொள்வனவை ஆளுநர் ஹேமக்குமார நாணயக்கார தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளார். தலா 6,40,000 ரூபா பெறுமதியான 125 கதிரைகள் கொள்வனவு செய்யப்படவிருந்தமை குறிப்பிடத்தக்கது. 04. வவுனியா – செட்டிக்குளம் பகுதியில் கைப்பற்றப்பட்ட 70,000 போதை வில்லைகளின் பின்னணியில் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் மாகந்துரே மதுஷ் உள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 05. மருந்தகம் மற்றும் பேக்கரிகளில் காகிதத்தால் தயாரிக்கப்பட்ட பைகளை பயன்படுத்துவதை சட்டபூர்வமாக்க மத்திய சுற்றாடல் அதிகார சபை தீர்மானித்துள்ளது. வௌிநாட்டுச் செய்திகள் 01. இரசாயன தயாரிப்பு நிறுவனமான மான்சாண்டோவின் (Monsanto) க்ளைபோசேட் என்ற இரசாயனம் கொண்ட பூச்சிக்கொல்லியால் தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதாகக் கூறி வழக்கு தொடர்ந்த நபருக்கு, 289 மில்லியன் டொலர்களை இழப்பீடாக வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 02. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக சிலியின் முன்னாள் ஜனாதிபதி மிச்செல் பசெலெட் (Michelle Bachelet) தெரிவு செய்யப்பட்டுள்ளார். விளையாட்டுச் செய்திகள் 01. தென் ஆபிரிக்காவிற்கு எதிராக இன்று (12) நடைபெறவுள்ள ஐந்தாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்காக சிறப்பாகத் தயாராகியுள்ளதாக இலங்கை அணியின் தலைமை பயிற்றுநரான சந்திக ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.