by Staff Writer 12-08-2018 | 8:03 PM
பாராளுமன்றத்தில் சுயாதீன குழுவாக செயற்படுவது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தெரிவிக்கின்றது.
எதிர்க்கட்சித்தலைவர் பதவியை தமக்கு வழங்குமாறு ஒன்றிணைந்த எதிர்க்கட்சி சபாநாயகரிடம் எழுத்துமூலம் கோரிக்கை விடுத்திருந்தது.
அரசியலமைப்பின் பிரகாரமும் பாராளுமன்ற சம்பிரதாயத்திற்கமையவும் எதிர்க்கட்சித் தலைவரின் பதவியில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது என சபாநாயகர் அதற்கு
பதிலளித்திருந்தார்.
இந்நிலையில், சுயாதீனமாக இயங்குவது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தற்போது தெரிவித்துள்ளது.