by Bella Dalima 11-08-2018 | 8:18 PM
Colombo (News 1st) பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாவுல்லா தெரிவித்தார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த நாட்டிற்காக வேலை செய்கின்றவர் அல்லவெனவும் வௌிநாட்டவர்களின் முகவராக செயற்பட்டு நாட்டை சின்னாபின்னப்படுத்துவதாகவும் ஏ.எல்.எம். அதாவுல்லா கூறினார்.
மத்திய வங்கி கொள்ளையைப் பார்க்கையில், உலகத்தில் பெருந்தொகையை கொள்ளையடித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்கவாகத்தான் இருக்கும் என ஏ.எல்.எம். அதாவுல்லா சுட்டிக்காட்டினார்.
மூதூரில் நேற்று (10) நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போது அவர் இந்தக் கருத்துக்களைக் கூறினார்.