வௌ்ளிக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

வௌ்ளிக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

வௌ்ளிக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

11 Aug, 2018 | 6:26 am

Colombo (News 1st)

உள்நாட்டுச் செய்திகள்

01. எரிபொருள் விலை நேற்று (10) நள்ளிரவு முதல் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

02. ரயில்வே ஊழியர்களுக்கு மட்டுமன்றி அனைத்து அரச சேவையாளர்களினதும் சம்பள கொடுப்பனவைத் திருத்துவது தொடர்பில் ஆராய்வதற்காக விசேட ஆணைக்குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை அடுத்தவாரம் சமர்ப்பிக்கவுள்ளதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

03. முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் திணைக்கள கட்டடம் மீதான தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரனுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

04. மன்னார் சதொச வளாகத்தினுள் மனிதப் புதைகுழி அகழ்வின்போது, ஊடகவியலாளர்கள் செல்வதற்குத் தடை விதித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது.

05. முதற்தடவையாக தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்வதற்கு சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களுக்கு, எதிர்வரும் முதலாம் திகதி முதல் 100 ரூபா கட்டணம் அறவிடப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

06. அரசியலமைப்பின் பிரகாரம் பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கு அமைய, எதிர்க்கட்சித் தலைவரை தம்மால் மாற்ற இயலாது என சபாநாயகர் கரு ஜயசூரிய பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

வௌிநாட்டுச் செய்திகள்

01. உள்நாட்டுப் போர் தீவிரமாக நடைபெற்று வரும் யேமனில், குழந்தைகள் பயணித்த பஸ்ஸின் மீது நடத்தப்பட்ட வான் தாக்குதலில் கொல்லப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்