முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல்வள திணைக்களத் தாக்குதல் தொடர்பில் கைதானவர்களுக்கு பிணை

முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல்வள திணைக்களத் தாக்குதல் தொடர்பில் கைதானவர்களுக்கு பிணை

முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல்வள திணைக்களத் தாக்குதல் தொடர்பில் கைதானவர்களுக்கு பிணை

எழுத்தாளர் Staff Writer

11 Aug, 2018 | 7:38 pm

Colombo (News 1st)  முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல்வள திணைக்களம் தாக்கப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட ஆறு பேரும் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளளனர். ​

முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல்வள திணைக்களம் தாக்கப்பட்டமை தொடர்பில் மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகள் அறுவர் நேற்றிரவு முல்லைத்தீவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

சந்தேகநபர்கள் முல்லைத்தீவு மாவட்ட பதில் நீதவான் என்.சுதர்சன் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்தனர்.

எதிர்வரும் 21 ஆம் திகதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இதேவேளை, முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் திணைக்கள கட்டடம் மீதான தாக்குதல் தொடர்பில் நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரனுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்