by Bella Dalima 11-08-2018 | 3:55 PM
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிக்குமாறு உயர்நீதிமன்றத்திடம் தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி 1991 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் திகதி கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 4 பேருக்கு தூக்குத்தண்டணையும் ஏனைய மூவருக்கு ஆயுள்தண்டனையும் வழங்கப்பட்டது.
2000 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நளினியின் தூக்குத்தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.
இதனிடையே, தண்டணைக்குள்ளானவர்கள் சார்பில் கருணை மனு தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரினதும் தூக்குத்தண்டணையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து இந்திய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளிகள் 7 பேரையும் விடுதலை செய்யுமாறு கோரிக்கைகள் பல முன்வைக்கப்பட்டு வருகின்றன.
எனினும், அவர்களை விடுவிக்க முடியாது என இந்திய உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதன் பின்னணியில், தற்போது மீண்டும் தமிழக அரசு அவர்களை விடுவிக்குமாறு உயர் நீதிமன்றத்திடம் கோரிக்கை முன்வைத்துள்ளது.