தேசிய அடையாள அட்டைக்கு 100 ரூபா கட்டணம் அறவீடு

தேசிய அடையாள அட்டைக்கு 100 ரூபா கட்டணம் அறவீடு

தேசிய அடையாள அட்டைக்கு 100 ரூபா கட்டணம் அறவீடு

எழுத்தாளர் Bella Dalima

10 Aug, 2018 | 3:38 pm

Colombo (News 1st) முதற்தடவையாக தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்வதற்கு  சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களுக்கு, எதிர்வரும் முதலாம் திகதி முதல் 100 ரூபா கட்டணம் அறவிடப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

விசேட வர்த்தமானி ஒன்றினூடாக உள்நாட்டலுவல்கள் மற்றும் வடமேல் அபிவிருத்தி அமைச்சு இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, தேசிய அடையாள அட்டைகளில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு 250 ரூபா செலுத்தப்பட வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், காலாவதியான அடையாள அட்டைக்குப் பதிலாக புதிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்வதற்கு 100 ரூபா செலுத்தப்பட வேண்டும் என உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்