தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தராக பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் மீண்டும் நியமனம்

தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தராக பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் மீண்டும் நியமனம்

தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தராக பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் மீண்டும் நியமனம்

எழுத்தாளர் Bella Dalima

10 Aug, 2018 | 7:37 pm

Colombo (News 1st) தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக பதிவாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

ஜனாதிபதி செயலாளரின் கையொப்பத்துடன் உபவேந்தருக்கான நியமனக்கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, எதிர்வரும் 3 வருடங்களுக்கு தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜிம் செயற்படவுள்ளார்.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தருக்கான பதவிக்காலம் கடந்த ஜூலை மாதம் நிறைவடைந்ததையடுத்து, அதிகாரம் மிகு அதிகாரியாக பேராசிரியர் உமா குமாரசுவாமி செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்