by Staff Writer 10-08-2018 | 3:47 PM
Colombo (News 1st) ஜனாதிபதி செயலணியின் முன்னாள் தலைமை அதிகாரி காமினி செனரத் உள்ளிட்ட 04 பிரதிவாதிகளை மூவரடங்கிய விசேட நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசிற்கு சொந்தமான 04 பில்லியன் ரூபா பணத்தை முறையற்ற ரீதியில் பயன்படுத்தியமை தொடர்பில் அவர்களுக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
காமினி செனரத், பியதாச குடாபாலகே, நில் பண்டார ஹப்புஹின்ன மற்றும் லசந்த பண்டார ஆகிய பிரதிவாதிகள் இன்று நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.
சம்பவம் தொடர்பில் சட்ட மா அதிபரால் மூவரடங்கிய விசேட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் இன்று மன்றில் அறிவித்தனர்.
மேலும், வழக்கின் முதலாம் மற்றும் இரண்டாம் பிரதிவாதிகளின் வௌிநாட்டு கடவுச்சீட்டை மீள நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் இதன்போது உத்தரவிடப்பட்டது