புதன்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

புதன்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 09-08-2018 | 6:24 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. புதிய அரசியலமைப்பைத் தயாரிப்பதற்கான நிபுணர் குழுவின் அறிக்கை, நேற்று (08) அரசியலமைப்பு நடவடிக்கை குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டது. 02. நாட்டின் அபிவிருத்திக்காக வௌிநாடுகளில் வாழும் புலம்பெயர் மக்களின் முதலீடுகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என இராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்க தெரிவித்தார். 03. எரிபொருள் விலை மற்றும் நீர் கட்டணத் திருத்தங்கள் தொடர்பில் பாராளுமன்றத்தில் நேற்று (08) எதிர்வுகூறப்பட்டது. 04. வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரனையும் மாகாண அமைச்சர்கள் இருவரையும், எதிர்வரும் செப்டெம்பர் 7 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நேற்று (08) அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 05. இந்தியாவிலுள்ள ஏனைய இலங்கை அகதிகளையும் நாடு திரும்புமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று (08) பாராளுமன்றத்தில் பேசும்போது அழைப்பு விடுத்துள்ளார். 06. நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் பேரில் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு 6 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 07. அரச அச்சக ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதால், வர்த்தமானிகள் உள்ளிட்ட அரச ஆவணங்களை தனியார் துறையிடம் கையளிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். வௌிநாட்டுச் செய்தி 01. இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும் தமிழக முன்னாள் முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு. கருணாநிதியின் இறுதிச்சடங்குகள் நேற்று (08) மாலை இடம்பெற்றன. விளையாட்டுச் செய்தி 01. விளையாட்டு சங்கங்களின் தேர்தலுக்கு ஓய்வுபெற்ற நீதிபதிகள் கொண்ட குழுவை நியமிப்பதற்காக, விளையாட்டு சட்டத்தை மறுசீரமைக்கவுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா குறிப்பிட்டார்.