பணிப்பகிஷ்கரிப்புகளால் பாதிக்கப்படுவது பொதுமக்களே

பணிப்பகிஷ்கரிப்புகளால் பாதிக்கப்படுவது அப்பாவி பொதுமக்களே: ஜனாதிபதி

by Bella Dalima 09-08-2018 | 7:50 PM
Colombo (News 1st) பணிப்பகிஷ்கரிப்புகளால் பாதிக்கப்படுவது அப்பாவி பொதுமக்களே தவிர அரசாங்கம் அல்லவென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஒரு இலட்சம் மூலிகைத் தாவரங்களை பயிரிடும் திட்டத்தை ஆரம்பிக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி, ரயில்வே தொழிற்சங்கங்களின் பணிப்பகிஷ்கரிப்பு தொடர்பில் பின்வருமாறு கருத்துத் தெரிவித்தார்.
நான் பல வருடங்களாக கொழும்பு - கம்பஹா ரயிலில் பயணித்துள்ளேன். ரயிலில் செல்லும் பயணிகள், மாணவர்கள் உள்ளிட்ட சிலரிடம் ரயிலுக்கான சீசன் டிக்கெட் மாத்திரமே இருக்கும். 5 சதமேனும் இருக்காது என்பதை நான் அறிவேன். பாடசாலை மாணவர்கள் வீட்டில் வழங்கும் உணவுப்பொதி மற்றும் சீசன் டிக்கெட் உடன் தான் செல்வார்கள். சில ஏழ்மையிலுள்ள அரச ஊழியர்கள் மற்றும் தனியார் ஊழியர்களுக்கு தொழில் செய்யும் இடத்தில் உணவு கிடைக்கும். சிலரிடம் ரயிலுக்கான சீசன் டிக்கெட் மாத்திரமே இருக்கும். ரயிலிலுள்ள குழாயிலேயே நீர் அருந்துவார்கள். ஒரு போத்தல் நீர் வாங்குவதற்கு கூட இந்த பிள்ளைகளிடமோ ஏழ்மையிலுள்ள அரச ஊழியர்களிடமோ தனியார் ஊழியர்களிடமோ பணமிருக்காது. தேசத்தில் மறுமலர்ச்சியை உருவாக்க இவை உங்களின் மனதில் தோன்ற வேண்டிய விடயங்களாகும்​.