மடு மாதா திருவிழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி

மடு மாதா திருவிழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி

மடு மாதா திருவிழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி

எழுத்தாளர் Staff Writer

09 Aug, 2018 | 7:30 pm

Colombo (News 1st)  மன்னார் மடு மாதா திருத்தலத்தின் ஆவணித் திருவிழா தொடர்பான கலந்துரையாடல் மன்னார் மறைமாவட்ட ஆயர் இமானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் இன்று நடைபெற்றது.

மன்னார் மடு மாதா ஆலயத்தின் ஆவணித் திருவிழா கடந்த 6 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுதுடன், எதிர்வரும் 15 ஆம் திகதி திருவிழா திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது.

திருவிழாவிற்கான ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடலொன்று மடு மாதா ஆலயத்தில் இன்று நடைபெற்றது.

இதன்போது போக்குவரத்து, வீதி புனரமைப்பு, பாதுகாப்பு, குடிநீர் விநியோகம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

திருவிழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக மடு மாதா ஆலய பரிபாலகர் அருட்தந்தை எஸ். எமிலியானுஸ்பிள்ளை தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்