ரஞ்சனிற்கு எதிரான வழக்கை விசாரிக்கத் தீர்மானம்

ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிரான வழக்கை விசாரிக்கத் தீர்மானம்

by Staff Writer 08-08-2018 | 2:07 PM
Colombo (News 1st) நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் கீழ் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்துள்ள வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம் இன்று (08) தீர்மானித்துள்ளது. ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிராக சட்டமா அதிபர் 4 குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளார். குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தாம் சுற்றவாளி என ராமநாயக்க நீதிமன்றத்தில் அறிவித்ததைத் தொடர்ந்தே வழக்கை விசாரிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் சாட்சியாளர்கள் பட்டியலை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு உயர்நீதிமன்றம் இன்று சட்டமா அதிபருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. பிரதம நீதியரசர் பிரியசாத் டெப். உயர்நீதிமன்ற நீதியரசர்களான நலீன் பெரேரா மற்றும் பிரசன்ன ஜயவர்தன ஆகியோர் முன்னிலையில் குறித்த வழக்கு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் செப்டெம்பர் 5ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.