ஊழல் மோசடி குறித்து அறிவிப்பதற்கு விசேட பிரிவு

மொரகஹந்த - களுகங்கை செயற்றிட்டம்: ஊழல் மோசடி குறித்து அறிவிப்பதற்கு ஜனாதிபதி விசேட பிரிவு

by Staff Writer 08-08-2018 | 7:23 AM
Colombo (News 1st) மொரகஹந்த - களுகங்கை அபிவிருத்தி செயற்றிட்டத்தின் நிர்மாணப் பணிகளில் ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக உறுதியான தகவல்கள் காணப்படுமாயின் அது தொடர்பில் தெரிவிப்பதற்கான ஜனாதிபதி விசேட பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. 23,000 கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுவரும் நாட்டின் பாரிய பல்நோக்கு அபிவிருத்தி செயற்திட்டமாக மொரகஹகந்த – களுகங்கை நீர்த்தேக்க செயற்றிட்டம் காணப்படுகின்றது. கடந்த ஜூலை 23 ஆம் திகதி இடம்பெற்ற களுகங்கை நீர்த்தேக்கத்தின் நீர்நிரப்பும் விழாவின்போது, இந்த விசேட பிரிவினை துரிதமாக ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதியால் தெரிவிக்கப்பட்டதற்கு அமைவாகவே இந்த விசேட பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. 011 - 2034159 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக அல்லது 011 - 2879976 என்ற தொலைநகல் இலக்கத்தினூடாக சாட்சியங்களுடன் கூடிய தகவல்களை அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, பணிப்பாளர் – விசாரணைகள், மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு, சொபாதம் பியச, இல. 416/ சீ/1, ரொபட் குணவர்தன மாவத்தை, பத்தரமுல்ல” எனும் முகவரியிலும் முறைப்பாடுகளை சமர்ப்பிக்க முடியும்.

ஏனைய செய்திகள்