செவ்வாய்க்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

செவ்வாய்க்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 08-08-2018 | 6:29 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. பாராளுமன்றத்தில் நேற்று (07) நடைபெற்ற இந்த மாதத்திற்கான முதலாவது சபை  அமர்வில், எதிர்க்கட்சித்தலைவர் பதவி தொடர்பில் விவாதிக்கப்பட்ட நிலையில், இது குறித்த தமது நிலைப்பாட்டை எதிர்காலத்தில் அறிவிப்பதாக சபாநாயகர் குறிப்பிட்டார். 02. 27,176 மில்லியன் ரூபாவிற்கான குறைநிரப்பு பிரேரணை பாராளுமன்றத்தில் நேற்று (07) சமர்ப்பிக்கப்பட்டது. 03. யாழ். சுழிபுரத்தைச் சேர்ந்த சிறுமி ரெஜினாவின் கொலை தொடர்பான வழக்கு விசாரணை மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (07) முன்னெடுக்கப்பட்டபோது, ரெஜினாவின் பள்ளித்தோழியும் அவர்களது வீட்டிற்கு அருகிலுள்ள பெண்மணி ஒருவரும் சாட்சியமளித்தனர். 04. பனலிய ரயில் விபத்து தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை கிடைக்கும் வரை ரயிலின் சாரதி, உதவியாளர், ஒழுங்குபடுத்தல் உத்தியோகத்தர் மற்றும் உதவி ஒழுங்குபடுத்தல் உத்தியோகத்தர் ஆகியோரின் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது. 05. பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் முன்னெடுக்கப்படும் பகிடிவதைகள் தொடர்பில் முறைப்பாடு செய்வதற்கு அவசர தொலைபேசி இலக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. வௌிநாட்டுச் செய்திகள் 01. திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் முன்னாள் முதல்வருமான கலைஞர் மு. கருணாநிதி தமது 94 ஆவது அகவையில் நேற்று (07) காலமானார். 02. வடக்கு சீனாவின் ஹார்பின் பகுதியிலுள்ள வீதியொன்றில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட இராட்சதப் பள்ளத்தில், அடுத்தடுத்து இரண்டு கார்கள் வீழ்ந்துள்ளன. விளையாட்டுச் செய்திகள் 01. தென்னாபிரிக்க அணித்தலைவரான பெப் டு பிளசிஸ் உபாதைக்குள்ளாகியுள்ள காரணத்தினால், இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் ஒற்றை சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரிலிருந்து விலகியுள்ளார்.