புறக்கோட்டையில் விபத்தின் பின்னரான மோதலில் மூவர் காயம்

புறக்கோட்டையில் விபத்தின் பின்னரான மோதலில் மூவர் காயம்

புறக்கோட்டையில் விபத்தின் பின்னரான மோதலில் மூவர் காயம்

எழுத்தாளர் Staff Writer

08 Aug, 2018 | 6:55 am

Colombo (News 1st) கொழும்பு – புறக்கோட்டை பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றின் பின்னர், ஏற்பட்ட மோதலில் காயமடைந்த மூவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அலுவலக சேவை பஸ் ஒன்றும் கார் ஒன்றும் மோதியதில் இந்த விபத்து சம்பவித்ததாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்தினைத் தொடர்ந்து பஸ்ஸின் சாரதிக்கும் காரின் சாரதிக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

இதன்போது, காரின் சாரதி பஸ்ஸின் சாரதியை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார்.

தாக்குதலில் காயமடைந்த பஸ்ஸின் சாரதி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் இதன்போது, காயமடைந்த காரில் பயணித்த இருவரும் தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்றுவருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்