மெரினா என்று வந்துவிட்டால் நீதி வெல்லும்: விஷால்

மெரினா என்று வந்துவிட்டால் நீதி வெல்லும்: விஷால்

மெரினா என்று வந்துவிட்டால் நீதி வெல்லும்: விஷால்

எழுத்தாளர் Bella Dalima

08 Aug, 2018 | 4:10 pm

ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய நடிகர் விஷால், மெரினா என்று வந்துவிட்டால் எப்போதுமே நீதி வெல்லும் என்று ட்வீட் செய்துள்ளார்.

காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி நேற்று (07) மாலை காலமானார்.

அவரது மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களும் சினிமா பிரபலங்களும் முக்கியஸ்தர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கருணாநிதி உடலுக்கு இன்று காலை ராஜாஜி அரங்கிற்கு நேரில் சென்று நடிகர் விஷால் அஞ்சலி செலுத்தினார். பின்னர், அவரது ட்விட்டர் பக்கத்தில்,

மெரினா என்று வந்துவிட்டால் எப்போதுமே நீதி வெல்லும்… இப்படியாக ஒரு மைல்கல் தீர்ப்பை வழங்கிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிக்கு மனமார்ந்த நன்றிகள்… மெரினா கலைஞர் ஐயாவிற்கான இடம் என்பதில் சந்தேகமில்லை.

என கூறியுள்ளார்.

மெரினாவில் கருணாநிதிக்கு இடமளிக்க தமிழக அரசு மறுத்த நிலையில், கருணாநிதிக்கு இடம் ஒதுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்