முல்லைத்தீவில் தப்பிச்சென்ற கைதிகளில் இருவர் மீண்டும் கைது

முல்லைத்தீவில் தப்பிச்சென்ற கைதிகளில் இருவர் மீண்டும் கைது

முல்லைத்தீவில் தப்பிச்சென்ற கைதிகளில் இருவர் மீண்டும் கைது

எழுத்தாளர் Staff Writer

08 Aug, 2018 | 12:58 pm

Colombo (News 1st) முல்லைத்தீவு நீதிமன்றத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டபோது, தப்பிச்சென்ற கைதிகளில் இருவர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்த நால்வர் நேற்று (07) மாலை 3 மணியளவில் நீதிமன்ற மலசலகூடத்தை உடைத்து தப்பிச்சென்றுள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மற்றைய இரு கைதிகளைத் தேடி சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

தப்பிச்சென்ற சந்தேகநபர்களில் ஒருவர் கொலைக்குற்றச்சாட்டு தொடர்பிலும் மற்றுமொருவர் வீடுடைப்பு தொடர்பிலும் ஏனைய இருவரும் திருட்டுச்சம்பவங்கள் தொடர்பிலும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்