புதிய அரசியலமைப்பிற்கான நிபுணர் குழு அறிக்கை அரசியலமைப்பு நடவடிக்கை குழுவிடம் சமர்ப்பிப்பு

புதிய அரசியலமைப்பிற்கான நிபுணர் குழு அறிக்கை அரசியலமைப்பு நடவடிக்கை குழுவிடம் சமர்ப்பிப்பு

புதிய அரசியலமைப்பிற்கான நிபுணர் குழு அறிக்கை அரசியலமைப்பு நடவடிக்கை குழுவிடம் சமர்ப்பிப்பு

எழுத்தாளர் Staff Writer

08 Aug, 2018 | 9:46 pm

Colombo (News 1st) புதிய அரசியலமைப்பைத் தயாரிப்பதற்கான நிபுணர் குழுவின் அறிக்கை இன்று (08) அரசியலமைப்பு நடவடிக்கை குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் தலைமையில் அரசியலமைப்பு நடவடிக்கை குழு இன்று பிற்பகல் கூடியபோது இந்த அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளது.

கடந்த கூட்டங்களின் போது நிபுணர் குழுவின் இரண்டு அறிக்கைகள் நடவடிக்கை குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டதுடன், அவை நிராகரிக்கப்பட்டன.

அத்தோடு, ஒரு அறிக்கையை தயாரிக்குமாறும் அறிவிக்கப்பட்டது.

நிபுணர் குழுவின் நடவடிக்கைகளுக்கு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன ஆகியோர் அழுத்தம் பிரயோகித்ததாக நிபுணர் குழுவின் சில உறுப்பினர்கள் அண்மையில் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

நிபுணர் குழு சார்பில் இன்று சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை தொடர்பில் மூன்று நிபுணர்கள் தமது நிலைப்பாடுகளை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்