முறையான விசாரணைகளை நடத்துமாறு அமைச்சர் ஆலோசனை

பனலிய ரயில் விபத்து: முறையான விசாரணைகளை நடத்துமாறு அமைச்சர் ஆலோசனை

by Staff Writer 07-08-2018 | 12:16 PM
Colombo (News 1st) மலையக மார்க்கத்தில் பனலிய பகுதியில் நேற்று (06) இடம்பெற்ற ரயில் விபத்து தொடர்பில் முறையான விசாரணைகளை நடத்துமாறு போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். விபத்தை ஏற்படுத்திய ரயிலின் சாரதியை சேவையிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்தி, விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ரயில்வே பொது முகாமையாளர் எஸ்.எம். அபேவிக்ரமவிற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த விசாரணைகளுக்கு, ரயில்வே பொது முகாமையாளரின் தலைமையிலான மூவரடங்கிய குழுவொன்றை நியமிக்குமாறும் போக்குவரத்து அமைச்சர் மேலும் பணிப்புரை விடுத்துள்ளார். விசாரணைகளின் ஊடாக, தவறு ஏற்பட்டுள்ள விதம் குறித்து ஆராய்ந்து, அதனுடன் தொடர்புடையவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு ஆலோசனை கிடைத்துள்ளதாக ரயில்வே பொதுமுகாமையாளர் எஸ்.எம். அபேவிக்ரம தெரிவித்துள்ளார். பனலிய பகுதியில் சமிக்ஞை இல்லாமையால் நிறுத்திவைக்கப்பட்டிருந்த அலுவலக ரயில் ஒன்றுடன் மற்றொரு அலுவலக ரயில் மோதியதில் விபத்து சம்பவித்தது. இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வருவதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஏனைய செய்திகள்