பனலிய ரயில் விபத்து குறித்து விசாரணை

பனலிய ரயில் விபத்து குறித்து விசாரணை

by Staff Writer 07-08-2018 | 8:50 AM
Colombo (News 1st) மலையக ரயில் மார்க்கத்தின் றம்புக்கனை மற்றும் பொல்கஹவெல இடையே பனலிய பகுதியில் ஏற்பட்ட ரயில் விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. விசாரணைகளின் ஊடாக, தவறு ஏற்பட்டுள்ள விதம் குறித்து ஆராய்ந்து அதனுடன் தொடர்புடையவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் எஸ்.எம். அபேவிக்ரம தெரிவித்துள்ளார். நேற்று ( (06) ) பிற்பகல் 4.35 மணிக்கு கொழும்பு கோட்டையிலிருந்து கண்டிக்குப் பயணித்த அலுவலக ரயில் சமிக்ஞை இல்லாததால் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. அதேநேரம், கொழும்பு கோட்டையிலிருந்து புறப்பட்ட மற்றுமொரு அலுவலக ரயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்​த குறித்த ரயிலுடன் மாலை 6.30 மணியளவில் மோதியுள்ளது. இந்த விபத்தில் காயமடைந்த 32 பேரும் குருநாகல், பொல்கஹவெல, றம்புக்கனை மற்றும் கேகாலை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.