கலைஞர் மு. கருணாநிதி காலமானார்

கலைஞர் மு. கருணாநிதி காலமானார்

கலைஞர் மு. கருணாநிதி காலமானார்

எழுத்தாளர் Bella Dalima

07 Aug, 2018 | 7:09 pm

திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர், கலைஞர் மு. கருணாநிதி தமது 94 ஆவது அகவையில் காலமானார்.

மாலை 6.10 அளவில் உயிர் பிரிந்ததாக காவேரி வைத்தியசாலை அறிக்கை வௌியிட்டுள்ளது.

மு. கருணாநிதி, சிறுநீரகப் பாதையில் ஏற்பட்ட தொற்று காரணமாக 11 நாட்களுக்கு முன்னர் காவேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

சிகிச்சை பலனின்றி அவர் காலமானதாக வைத்தியசாலை வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1924 ஆம் ஆண்டு பிறந்த கலைஞர் மு.கருணாநிதி, 5 தடவைகள் தமிழகத்தின் முதலமைச்சராக செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்