துப்பாக்கியுடன் விமானநிலையத்தில் ஒருவர் கைது

துப்பாக்கியுடன் விமானநிலையத்தில் ஒருவர் கைது

by Staff Writer 06-08-2018 | 4:58 PM

டுபாய் நோக்கி பயணிப்பதற்காக துப்பாக்கியுடன் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு வருகை தந்த ஒருவர் விமான நிலைய பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ராஜகிரியவைச் சேர்ந்த 50 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சந்தேகநபர் விமானப்படையின் விமானியாக கடமைபுரிந்துள்ளதுடன், தற்போது கென்யாவில் உள்நாட்டு விமான நிறுவனமொன்றில் பணிபுரிவதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர். சந்தேகநபர் நீர்கொழும்பு நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.

ஏனைய செய்திகள்