கரீமா மரிக்கார் முதல் முஸ்லிம் பெண் மேயராகிறார்

கரீமா மரிக்கார் (இலங்கை) : லண்டன் ஹரோவ் கவுன்சிலின் முதலாவது பெண் முஸ்லிம் மேயர்

by Staff Writer 06-08-2018 | 7:35 PM

கண்டி பெண்கள் உயர் கல்லூரியின் பழைய மாணவியான கரீமா மரிக்கார் ஹோட்டல் முகாமைத்துவ கற்கை நெறியை பூர்த்தி செய்தவர்.

1990ஆம் ஆண்டி திருமண பந்தத்தில் இணைந்ததையடுத்து, அவர் லண்டனுக்குச் சென்றார். இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட கரீமா மரிக்கார், லண்டனின் ஹரோவ் கவுன்சிலின் உறுப்பினராக 2010ஆம் ஆண்டில் முதன்முறையாக தெரிவுசெய்யப்பட்டார். 2017 - 2018ஆம் ஆண்டு காலப்பகுதியில், பிரதி மேயராக பதவி வகித்த அவர், 2018 - 2019ஆம் ஆண்டிற்கான மேயராக கடந்த மே மாதம் தெரிவானார். லண்டனின் ஹரோவ் கவுன்சிலின் முதலாவது பெண் முஸ்லிம் மேயரான இலங்கையைப்பூர்வீகமாகக் கொண்ட கரீமா மரிக்காரை வரவேற்கும் நிகழ்வு கண்டியில் இன்று (06) நடைபெற்றது.