எதிர்க்கட்சி தலைமை குறித்து பேசுவதில்லை-சபாநாயகர்

எதிர்க்கட்சித் தலைமை தொடர்பில் பேசுவதில்லை - சபாநாயகர்

by Staff Writer 06-08-2018 | 9:35 PM

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வேறு ஒருவருக்கு வழங்குவது தொடர்பில் ஊடகவியலாளர்கள் இன்று (06) சபாநாயகரிடம் கேள்வி எழுப்பினர்.

பாராளுமன்றத்தில் இரண்டாவது பெரும்பான்மை தமக்கே உள்ளதாகத் தெரிவித்து, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியே இந்த விடயத்தை முதலில் பேசுபொருளாக்கியது. இதன்படி, பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு, தினேஷ் குணவர்தனவை நியமிக்குமாறு கோரி, பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கையொப்பமிட்டு கடந்த 30ஆம் திகதி சபாநாயகருக்கு கடிதமொன்றை அனுப்பியிருந்தனர். இதனையடுத்து, கட்சியின் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை அறிவிக்குமாறு கோரி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் மஹிந்த அமரவீரவிற்கு, சபாநாயர் கரு ஜயசூரிய கடிதமொன்றை அனுப்பியிருந்தார். எவ்வாறாயினும், எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோர் இந்த விடயம் தொடர்பில் இன்று கண்டியில் பதில் வழங்கினர்.