அரச அச்சக ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.
அரசாங்க ஆதரவாளர்கள் சிலர் மீது அரசியல் பழிவாங்கல்கள் கட்டவிழ்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்து, அதற்கான நஷ்டஈட்டை பெற்றுத்தருமாறு வலியுறுத்தியுள்ளதுடன் மேலும பல கோரிக்கைகளை முன்வைத்து இந்தத் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அரச அச்சக ஊழியர்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சரத் லால் தெரிவித்துள்ளார்.
இந்தப் பணிப்பகிஸ்கரிப்பு காரணமாக வர்த்தமானி அறிவித்தல்களை அச்சிடுதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் தடைப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இது தொடர்பில் அரச அச்சகர் கங்கானி கல்பனியிடம் நியூஸ்பெஸ்ட் வினவியபோது,
குறித்த பணிப்பகிஷ்கரிப்பில் அரச அச்சக ஊழியர்களில் ஒரு தரப்பினர் மட்டுமே ஈடுபட்டுள்ளதாகவும் அச்சிடும் நடவடிக்கைகளில் எவ்வித தடையும் ஏற்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.